அறுவை சிகிச்சைகளின் போது நோயாளிக்கு மயக்க மருந்து அளித்து தயார்படுத்துவது அனஸ்தீசியா நிபுணர்களின் பணி. அறுவை சிகிச்சைக் கருவிகளையும், அறையையும் மிகுந்த சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும் வைத்து, மருத்துவர் அல்லது மருத்துவர் குழுவுக்கு உதவிகரமாக இருக்க வேண்டியதும் இவர்களின் முக்கியப் பணிகள். இப்பணியின் நுட்பங்களை அறிந்து, இத்துறையில் திறமையை வளர்த்துக் கொள்ள இந்த டிப்ளமோ பயிற்சியளிக்கிறது.