சமுதாயத்தில் மக்கள் சந்திக்கும் அடிப்படை சிக்கல்களுக்கு ஆலோசனை வழங்கவும், மன ரீதியாக அவர்களை சிரமங்களில் இருந்து விடுபடச்செய்வது பற்றியும் இந்த டிப்ளமோ பாடத்தில் கற்றுத்தரப்படுகிறது. கல்வி ஆலோசகர், ஆசிரியர், வர்த்தக பயிற்சியாளர்கள் முதலியவர்கள் இந்த பாடத்திட்டத்தை படிப்பதால் பயனடைவார்கள். இந்த கல்வி கற்றவர்களால் சிலரைத் தவிர பெரும்பாலானோரை நல்ல நிலைக்கு மாற்றிவிட முடியும்.