மனிதன் நோயின்றி வாழ்வதில் உணவுப் பழக்கவழக்கங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உடற்கூறியல், உயிர் வேதியியல், உணவூட்ட உடற்கூறியல், நோய் அறிவியல், உணவு அறிவியல் ஆகியவை சார்ந்த படிப்பாக இந்த டிப்ளமோ உள்ளது. உணவுப் பழக்கங்களுக்கும், நீண்ட கால நோய்களுக்கும் உள்ள தொடர்பு, உணவுப் பழக்கம் தொடர்பான நடைமுறைகள் போன்றவை பற்றி இதில் விளக்கப்படுகின்றன.
மாணவர்களுக்கு உணவுப் பழக்கவழக்க விதிமுறைகளில், அட்டவணைப்படுத்தல், உணவூட்ட அளவீடுகள், ஊட்டச்சத்து குறைபாட்டை கண்டுபிடித்தல், தேவைப்படும் ஆற்றலை அளவிடுதல் உள்ளிட்ட நடைமுறைகளில் தேவையான பயிற்சியை அளிப்பதாக இந்த டிப்ளமோ அமைந்துள்ளது. நோயாளிகளுக்கு தேவையான உணவுகளையும், மருந்துகளையும் பரிந்துரை செய்வதிலும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.